இந்திய குடும்பம் எரித்து கொடூர கொலை; துடிதுடித்த 16 வயது மகள் - கனடாவில் பகீர்!
இந்திய குடும்பம் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி
கனடா, ஒன்டாரியோ மாகாணத்தில் வசித்து வருபவர் ராஜீவ் வாரிகோ(51). இவரது மனைவி ஷில்பா கோத்தா(47). இவர்களுக்கு மகேக் வாரிகோ(16) எனும் 16 வயதில் மகள் உள்ளார். இந்த குடும்பம் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள்.
இந்நிலையில், பிக் ஸ்கை வே என்ற பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் அவர்கள் தீ விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டனர். இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூவர் உயிரிழப்பு
அதில், ராஜீவ் ஒன்டோரியோ அரசாங்கத்தின் சுகாதார துறையில் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அக்கம்பக்கத்தினர் இது கொலை வழக்காக இருக்கலாம் என்று இந்த விபத்து தற்செயலாக ஏற்பட்டது போலத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அங்கே முழுமையாக தீ பரவும் முன்பு, ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. அதன் பிறகு சில நிமிடங்களிலேயே தீ வீடு முழுக்க பரவியதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த காவல்துறை அறிக்கையில், "இந்த வழக்கை நாங்கள் எங்களின் கொலை விசாரணை அமைப்பு மூலம் விசாரித்து வருகிறோம்.
இந்த தீ விபத்து தற்செயலானது இல்லை என்று ஒண்டோரியோ தீயணைப்பு அதிகாரி கருதியது போல, நாங்களும் இந்த தீ விபத்து சந்தேகத்துக்குரியதாகவே கருதுகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.