வெளிநாட்டு வாழ் இந்தியர்.. குடும்பத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மர்மம் - அதிர்ச்சி!

United States of America India Death
By Vinothini Oct 07, 2023 06:26 AM GMT
Report

 அமெரிக்காவில் வாழும் இந்தியர் தனது குடும்பத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்

உத்தரபிரதேச மாநிலம், ஜலான் ராஜேந்திர நகரை சேர்ந்தவர் தேஜ் பிரதாப் சிங் 43 வயதான இவர் அமெரிக்காவில் 2009-ம் ஆண்டில் இருந்து சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

indian-origin-family-found-dead-in-new-jersey-home

இவர் நியூஜெர்சி பின்ஸ்போரோ என்ற பகுதியில் மனைவி சோனல் பரிகார் (42) மகன் ஆயுஷ் (10) மகள் ஆரி (6) ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டி கிடந்துள்ளது, ஆள் நடமாட்டமே இல்லாததால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

டானிக்கிற்கு பதில் பினாயிலை கொடுத்த நர்ஸ்.. வாயில் நுரைதள்ளி இறந்த 11 மாத குழந்தை!

டானிக்கிற்கு பதில் பினாயிலை கொடுத்த நர்ஸ்.. வாயில் நுரைதள்ளி இறந்த 11 மாத குழந்தை!

மர்ம மரணம்

இந்நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தனர். அங்கு படுக்கையறையில் தேஜ் பிரதாப் சிங், அவரது மனைவி சோனல், மகன் ஆயுஷ் மற்றும் மகள் ஆரி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

dead

போலீசார் அவர்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.