டானிக்கிற்கு பதில் பினாயிலை கொடுத்த நர்ஸ்.. வாயில் நுரைதள்ளி இறந்த 11 மாத குழந்தை!

Gujarat Death
By Vinothini Oct 05, 2023 11:31 AM GMT
Report

நர்ஸ் ஒருவர் டானிக்கிற்கு பதில் பினாயிலை கொடுத்ததால் 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில், ஷர்தாபென் அரசு மருத்துவமனை உள்ளது. குஜராத் மாநகராட்சியால் நடத்தப்படும் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

டானிக்கிற்கு பதில் பினாயிலை கொடுத்த நர்ஸ்

இங்கு பெண் ஒருவர் தனது 11 மாத குழந்தையுடன் வந்தார், அதில் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகிய உடல் நல பாதிப்புகள் உள்ளதாக கூறினார். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் இவருக்கு டானிக் மற்றும் சில மருந்துகள் எழுதி கொடுத்தார்.

மேக வெடிப்பு.. திடீர் வெள்ளத்தில் சிக்கிய பலர் மாயம் - 14 பேர் உயிரிழப்பு!

மேக வெடிப்பு.. திடீர் வெள்ளத்தில் சிக்கிய பலர் மாயம் - 14 பேர் உயிரிழப்பு!

நர்ஸ் செய்த காரியம்

இந்நிலையில், நர்ஸ் வைட்டமின் டானிக் என ஒரு பாட்டிலை கொடுத்து இருக்கிறார். அதனை தினமும் மூன்று வேளைக்கு 5 மில்லி கொடுக்க வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார். குழந்தையின் அம்மாவும் நர்சு கூறியபடி டானிக்கை திறந்து 5 மில்லி கொடுத்துள்ளார்.

டானிக்கிற்கு பதில் பினாயிலை கொடுத்த நர்ஸ்

அதனை கொடுத்ததும் சில நிமிடங்களிலேயே குழந்தை வாயில் நுரை தள்ளியுள்ளது சற்று நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாய், டானிக்கை முகர்ந்து பார்த்த போது பினாயில் வாடை வந்துள்ளது. இது குறித்து அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பின்னர் தடயவியல் பரிசோதனைக்கு மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.