போதை மாத்திரை இலவசம் - பல பெண்களை சீரழித்த இந்திய மருத்துவர்
மருத்துவர் ஒருவர் நோயாளிகளுடன் உறவு கொண்டு, போதை மாத்திரைகளை இலவசமாக கொடுத்துள்ளார்.
போதை மாத்திரை
அமெரிக்கா, நியூ ஜெர்சியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி டாக்டர் ரித்தேஷ் கல்ரா(51). பேர் லானில் மருத்துவமனை நடத்தி வந்தார்.
இவர், முறையான மருத்துவ காரணமின்றி, தனது நோயாளிகளுக்கு பாலியல் சலுகைகளுக்காக மருந்துகளை விநியோகித்துள்ளார். போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு, அதிக போதை தரக்கூடிய வலி நிவாரணி மருந்துகளை எழுதி கொடுத்துள்ளார்.
சிக்கிய மருத்துவர்
மேலும் இதற்கு பிரதிபலனாக, சில பெண்களை பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு, 2019 முதல் 31,000க்கும் மேற்பட்ட பிரிஸ்கிரிப்ஷன் வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் ஒரு மில்லியன் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு நிலுவையில் இருக்கும் வரை தனது மருத்துவப் பணியை மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், நோயாளிகளை நேரில் பார்க்காமலேயே சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தந்து, அமெரிக்க பொது சுகாதார அமைப்பை ஏமாற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.