கிஸ் கேமில் சிக்கிய CEO; அம்பலமாகி வைரலான ரகசிய உறவு - நிறுவனம் என்ன சொல்கிறது?
நிகழ்ச்சிக்குப் போன ஒரு சிஇஓவின் ரகசிய உறவு அம்பலமாகியுள்ளது.
சிக்கிய சிஇஓ
ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆண்டி பைரன் மற்றும் மனித வளத்துறை அலுவலர் கிறிஸ்டின் கபோட் Coldplay இசை நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்ட வீடியோ வைரலானது.
கிஸ் கேமராவில் பைரனும், கிறிஸ்டினும் மாட்டிக் கொண்டனர். ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி இருந்தனர். இது நிறுவனத்துக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதனால், நிறுவனம் இருவருக்கும் விடுமுறை அளித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் எங்களை வழிநடத்திய கலாசாரத்தில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.
நிறுவன அறிக்கை
நமது தலைவர்கள் நடத்தை மற்றும் அதற்கான பொறுப்புக்கூறலில் தரத்தைக் காப்பார்கள் என நம்புகிறோம். இந்த விஷயத்தில் இயக்குநர்கள் குழு முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விரைவில் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆண்டி பைரன் விடுப்பில் இருக்கும் வரை இணை நிறுவனரும் தலைமை தயாரிப்பு அதிகாரியுமான பீட் டிஜாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆண்டி பைரன், மேகன் கெர்ரிகன் என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்டின் கபோட் ஏற்கெனவே திருமணம் நடந்து விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.