புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து - பெற்றோர் கண்முன்னே மகன் உயிரிழப்பு
இந்தியா வம்சாவளி மருத்துவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தியா வம்சாவளி மருத்துவர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவரான இந்திய வம்சாவளியினரான சுலைமான் அல் மஜித்(26) இங்கிலாந்தில் உள்ள கவுண்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டன் என்ஹெச்எஸ் அறக்கட்டளையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
புத்தாண்டை குடும்பத்துடன் வானில் பறந்து புதிய அனுபவத்தை அனுபவிக்க திட்டமிட்ட சுலைமான் அதற்காக சிறிய ரக விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
விமான விபத்து
குடும்பத்தினரை அழைத்து செல்லும் முன் முதலில் தான் அந்த விமானத்தில் பயணித்து பார்க்க திட்டமிட்டுள்ளார். அதன் படி, விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த 26 வயதான பெண் விமானி இயக்க, சுலைமான் அந்த விமானத்தில் பயணித்துள்ளார்.
சுலைமான் விமானத்தில் பறப்பதை பார்க்க அவரது பெற்றோர் மற்றும் இளைய சகோதரர், ஏவியேஷன் கிளப்பில் இருந்துள்ளனர். ராஸ் அல் கைமா கடற்கரையில் உள்ள கோவ் ரோடனா ஓட்டல் அருகே இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கடற்கரையில் விழுந்து விபத்தை சந்தித்துள்ளது.
விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான சிக்னல் தொடர்பை இழந்ததும், அவசர தரையிறக்கம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் விமானத்தை இயக்கிய பெண் விமானி மற்றும் சுலைமான் விமான விபத்தில் உயிரிழந்தனர். பெற்றோர் கண்முன்னே புத்தாண்டு கொண்ட முயன்ற நபர் உயிரிழந்த நபர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது.