கனடா விமானத்தில் பற்றிய தீ; மூடப்பட்ட விமான நிலையம் - பயணிகளின் நிலை என்ன?

Plane Crash Canada South Korea Flight Kazakhstan
By Karthikraja Dec 29, 2024 12:09 PM GMT
Karthikraja

Karthikraja

in கனடா
Report

 ஏர் கனடா விமானம் ஒன்றில் தரையிறங்கும் போது தீ பற்றியுள்ளது.

ஏர் கனடா எக்ஸ்பிரஸ்

ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று செயின்ட் ஜான் நகரில் இருந்து கனடாவில் உள்ள கோஃப்ஸில் உள்ள ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்திற்கு விமானம் வந்து கொண்டிருந்தது. 

air canada landing fire

இந்நிலையில் 9;30 மணியளவில் விமானம் ஹாலிஃபாக்ஸ் விமான நிலைய ஓடுபாதையில் திரையிறங்கும் போது விமானம் 20 டிகிரி இடதுபுறமாக சாய தொடங்கியுள்ளது.

பற்றிய தீ

சாய்ந்தபடியே விமானம் ஓடு பாதையில் சென்றதால் விமானத்தின் இறக்கைகள் தரையில் உரசியே படியே சென்று தீ பற்றியுள்ளது. பெரும் சத்தத்துடன் தீ பற்றியதோடு, கரும் புகை எழுவதை விமான ஜன்னல் வழியாக பார்த்த பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதன் பின்னர் விமானம் ஓடுபாதையில் நின்றவுடன் உடனடியாக மீட்பு குழுவினர் வந்து பயணிகளை பத்திரமாக மீட்டு சென்றனர். விமானத்தில் ஏறத்தாழ 80 பேர் பயணித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. 

விமானம் தரையிறங்கும் கியர் செயலிழந்ததற்கான காரணம் குறித்து விமான நிறுவனம் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

தொடர் விமான விபத்துகள்

இன்று காலை தென் கொரியா விமானம் ஒன்று தரையிறங்கும் போது லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் வெடித்து சிதறியது. விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் என 181 பேர் பயணித்த நிலையில் 178 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

south korea planer crash

இரு நாட்களுக்கு முன்னர் அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் விமானம் விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். இந்த வார தொடக்கத்தில் பிரேசிலில் வீட்டின் மீது சிறிய ரக தனியார் விமானம் விழுந்தததில் அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர்.