லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி - அதிர்ச்சியில் ஐ.நா.!

Israel Israel-Hamas War Iran-Israel Cold War
By Vidhya Senthil Oct 02, 2024 02:56 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report
  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் இந்த பதிலடி தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் 

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.

UNO

அந்த வகையில் கடந்த செப் 17 ஆம் தேதி பேஜர் மூலம் லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல் நடத்தியது . இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில் பதிலுக்கு,

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தினர்.இதில் குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை 492 பேர் உயிரிழந்தனர்.

இந்த சுழலில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அது மட்டும் நடந்தால்..ஈரானை அடித்து நொறுக்குவேன்..ஓப்பனாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அது மட்டும் நடந்தால்..ஈரானை அடித்து நொறுக்குவேன்..ஓப்பனாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

இதனால் ஏவுகணை தாக்குதலைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 தாக்குதல்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் இந்த பதிலடி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

israel

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், "மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்த பிறகு விரிவடைவதை நான் கண்டிக்கிறேன். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு முற்றிலும் போர் நிறுத்தம் தேவை" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் பதிவிட்டுள்ளார்.