அணுஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயார்..புதின் பகிரங்க எச்சரிக்கை - அலறும் அண்டை நாடுகள்!
ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது . இந்த போரால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்குப் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது .
அதே போல் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா ,பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.
இந்த சூழலில்,தீவிர ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யாவுக்கு எதிராக தொடுக்க உக்ரைனுக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அணு ஆயுதமற்ற உக்ரைனுக்கு , அணுஆயுத நாடுகளோடு சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகத் தீவிர ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இதனை ரஷ்யாவுக்கு எதிரான அணுஆயுத நாடுகளின் தாக்குதலாகவே ரஷ்யா கருதும்.
அதிபர் புதின்
அத்தகைய ஒரு சூழல் ஏற்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ரஷ்யா பின்பற்றி வரும் கொள்கை மாற்றத்துக்கு உள்ளாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு ரஷ்யாவின் அணுஆயுதக் கொள்கையை விளாடிமிர் புதின் மாற்றி அமைத்தார்.
அதில் எதிரியால் அணுசக்தி தாக்குதல் நடத்தப்பட்டாலோ அல்லது அரசின் இருப்பை அச்சுறுத்தும் தீவிர தாக்குதல்கள் நடத்தப்பட்டாலோ ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.