வச்சுட்டாங்க ஆப்பு.. விளக்கம் கொடுக்க ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்திய மருத்துவ இயக்குனரகம்!

Tamil nadu
By Sumathi 3 வாரங்கள் முன்

ஷர்மிகாவிற்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஷர்மிகா

சித்த மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசணைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இணையத்தில் அவர் வெளியிட்டு இருந்த சிலர் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் வந்தது.

வச்சுட்டாங்க ஆப்பு.. விளக்கம் கொடுக்க ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்திய மருத்துவ இயக்குனரகம்! | Indian Medicine Homeopathy Issued Notice Sharmika

இந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்து

கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும். ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும். பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது, கர்ப்பம் உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.