ஒரு Flow-ல சொல்லிட்டேன்; நானும் மனுஷி தானே - மன்னிப்பு கேட்ட ஷர்மிகா!

Tamil nadu
By Sumathi Jan 07, 2023 06:44 AM GMT
Report

டாக்டர் ஷர்மிகா தனது யூட்யூப் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார்.

ஷர்மிகா

சித்த மருத்துவரான ஷர்மிகா தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். அவ்வப்போது பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருவார். அந்த வகையில், கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும். ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும். பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.

ஒரு Flow-ல சொல்லிட்டேன்; நானும் மனுஷி தானே - மன்னிப்பு கேட்ட ஷர்மிகா! | Dr Sharmika Replies To Her Controversies

இவர் அளித்த பல நெறிமுறைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மன்னிப்பு

தொடர்ந்து டாக்டர் ஷர்மிகா, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தலைப்பில் தனது யூடியூப் பக்கத்தில், “நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளரும்னு சொல்லிருந்தேன். நுங்கு சாப்பிட்டால் குளிர்ச்சி. அதை சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகங்களும் வளரும்னுதான் சொன்னேன்.

அதே போல, குப்புற படுத்தா புற்றுநோய் வரும்னு சொல்லல. பொதுவாவே உடலுக்கு ரத்த ஓட்டம் சீரா இருக்கனும். ரத்த ஓட்டம் சீரா இல்லைனா புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கு. ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டா 3 கிலோ எடை கூடும்னு ஒரு ப்ளோல சொல்லிட்டேன். 1008 பிரச்சனை இருக்கு அப்டினா 1008 பிரச்சன இருக்குனா அர்த்தம்.

அதுபோலதான். இனிப்பு சாப்பிட்டா எடை அதிகரிக்கும். அதைத்தான் அப்படி சொன்னேன். நானும் மனுஷிதானே. தவறுகள் நடக்கத்தான் செய்யும். இதை யாராவது தவறா எடுக்கிட்டா மன்னிச்சுருங்க” என தெரிவித்துள்ளார்.