உலகின் விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய தம்பதி - யார் இவர்கள்?
இந்திய தம்பதி உலகின் மிகவும் விலை உயர்ந்த வீட்டை விலைக்கு வாங்கியுள்ளனர்.
இந்திய தம்பதி
இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் பன்கஜ் ஒஸ்வால். இவரது மனைவி ராதிகா ஒஸ்வால். இவர்கள் உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றை ரூபாய். 1649 கோடிகளுக்கு சுவிட்சர்லாந்தில் வாங்கியுள்ளனர்.
உலகில் இருக்கக்கூடிய டாப் 10 மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று. முழுவதுமாக பனியால் சூழப்பட்ட வில்லா கிகின்ஸ் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 4, 30,000 ஸ்கொயர் ஃபீட் கொண்ட அந்த வில்லா 'வில்லா வாரி' என்று அழைக்கப்படுகிறது.
வில்லா வாரி
இதற்காக 200 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளனர். அதனை ரெனவேட் செய்வதற்கான வேலையை பிரபலமான இன்டீரியர் டிசைனர் ஜெஃப்ரி வில்க்சிடம் ஒப்படைத்துள்ளனர்.
வில்லாவை மிகவும் ஆடம்பரமானதாகவும், சௌகரியமானதாகவும் கொடுத்துள்ளார்.
இங்கிருந்து பனி நிறைந்த ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அற்புதமான காட்சியை ரசிக்கலாம்.
முன்னதாக இது கிரேக்க கப்பல் அதிபரான அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் அவர்களின் மகளான கிறிஸ்டியானோ ஒனாசிஸ்க்கு சொந்தமாக இருந்தது.