வில்வித்தை உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய தம்பதி மூன்று தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை

sports-archery-game
By Nandhini Apr 26, 2021 09:05 AM GMT
Report

இந்திய தம்பதியான தீபிகா மற்றும் அவரது கணவர் அதானு தாஸ் வில்வித்தை உலகக் கோப்பைப் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநகரைச் சேர்ந்தவர்கள் அதானு தாஸ். இவரது மனைவி தீபிகா குமாரி. இவர்கள் இருவரும் இந்திய வில்வித்தை நட்சத்திரத் தம்பதி. தற்பொழுது சென்ட்ரல் அமேரிக்காவின் குவாத்தமாலா நகரத்தில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்று வருகிறது.

வில்வித்தை உலகக் கோப்பை போட்டியில் இவர்கள் தனித்தனியாய் விளையாடினார்கள். இவர்கள் ஆடிய ஆட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதுவரை ஆடிய ஆட்டத்தில் தீபிகா குமாரி மூன்று முறை வில்வித்தை உலகக் கோப்பையில் தங்கம் வெற்று சாதனை படைத்துள்ளார். அவரது கணவர் அதானு தாஸுக்கு இதுதான் முதல் வெற்றியாகும்.

வில்வித்தை உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய தம்பதி மூன்று தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை | Sports Archery Game

இதுகுறித்து தீபிகா பேசுகையில், இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு பல நாட்கள் ஆனது. இதனால் என் இதயத்துடிப்புப் பலமாக அடிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் எனக்கு உற்சாகம் அதிகமாக இருந்தது. நாங்கள் இருவரும் வெற்றி அடைந்தது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அதானு தாஸ் கூறுகையில், “எங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறியது போல் மனதுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. இது எனது முதல் வெற்றி. நானும் என் மனைவியும் வெற்றி அடைந்து விட்டோம் என்றார்.

இதனையடுத்து, அதானு தாஸ் டோக்கியோ நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இவர்களுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.