தனி தீவை வாங்கிய இந்தியர்; புதிய நாடு உருவாக்கத் திட்டம் - யார் தெரியுமா?

Singapore
By Sumathi Jul 05, 2025 02:30 PM GMT
Report

சிங்கப்பூருக்கு அருகில் தனி தீவை இந்தியர் ஒருவர் வாங்கியுள்ளார்.

பாலாஜி ஸ்ரீனிவாசன்

பாலாஜி ஸ்ரீனிவாசன் காயின்பேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், தி நெட்வொர்க் ஸ்டேட் என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியராகவும் உள்ளார்.

balaji srinivasan

இந்தியாவில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு அருகில் உள்ள தனியார் தீவை வாங்கியுள்ளார். அங்கு நெட்வொர்க் ஸ்டேட் என்ற பெயரில் ஒரு புதிய நாடு ஒன்றை உருவாக்கவுள்ளார்.

எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து கேன்சருக்கான மருந்து - சுவாரஸ்ய ஆய்வு முடிவு

எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து கேன்சருக்கான மருந்து - சுவாரஸ்ய ஆய்வு முடிவு

புதிய நாடு

இது தொழில்நுட்ப நிபுணர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனத் தலைவர்கள் மற்றும் எதிர்கால டிஜிட்டல் குடியுரிமைக்கான மேடையாக அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி தீவை வாங்கிய இந்தியர்; புதிய நாடு உருவாக்கத் திட்டம் - யார் தெரியுமா? | Indian Entrepreneur Balaji Srinivasan Buy Island

மேலும் இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, அந்தத் தீவில் நெட்வொர்க் ஸ்கூல் என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கான பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது.

இவரது முயற்சி உலகளாவிய தொழில்நுட்ப, கல்வி மற்றும் அரசியல் சமூகங்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.