AI மூலம் ரூ.10 லட்சம் கடனை அடைத்த பெண் - 30 நாட்களில் நடந்த ஆச்சர்ய சம்பவம்!

United States of America Chat GPT Artificial Intelligence
By Sumathi Jul 04, 2025 06:50 AM GMT
Report

AI உதவியுடன் பெண் ஒருவர் ரூ.10 லட்சம் கடனை அடைத்து சாதனை படைத்துள்ளார்.

ரூ.10 லட்சம் கடன்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆலன்(36). ரியால்டர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டராக உள்ளார். இவர் பகிர்ந்துள்ள தகவல் ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதில், ”என் பெயர் ஜெனிஃபர் ஆலன், எனக்கு 35 வயது.

chatgppt

நான் அமெரிக்காவின் டெலாவேரைச் சேர்ந்தவள். ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். என் குடும்பத்தை சமாளித்துக்கொள்ளும் அளவிலான சம்பளம். அதனால் எனக்கு ஏற்படும் அவசர தேவைகளுக்கு கிரெடிட் கார்டை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

சமீபத்தில் எனக்கு குழந்தை பிறந்தது, சில மருத்துவ அவசரம் காரணமாக $23,000 (சுமார் ரூ19.7 லட்சம்) கடனாகிவிட்டது. அதை நினைக்கும்போதே தலை சுற்றும். எப்படியாவது இந்தக் கடனை அடைத்துவிட வேண்டும் என முடிவு செய்து தேடத் தொடங்கினேன். அப்போதுதான் ChatGPTயிடம் கடனை அடைப்பது எப்படி என்பது குறித்து தேடினேன்.

ChatGPT எனக்கு 30 நாள் சேலஞ்ச் ஒன்றை கொடுத்தது. அதை செயல்படுத்தத் தொடங்கினேன். இப்போது சுமார் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன். அதாவது, ஒவ்வொரு நாளும், AI எளிமையான ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான வேலைகளை பரிந்துரைத்தது.

50 வயது தாயை 20 வயது நண்பனுக்கு திருமணம் செய்துவைத்த மகன் - என்ன காரணம்?

50 வயது தாயை 20 வயது நண்பனுக்கு திருமணம் செய்துவைத்த மகன் - என்ன காரணம்?

AI செய்த உதவி

என்னிடம் இருக்கும் பயன்படுத்தப்படாத subscribe-களை ரத்து செய்தல், மறந்துபோன கணக்குகளை மதிப்பாய்வு செய்தல் போன்ற திட்டங்களை வழங்கியது. அதன் மூலம் என்னுடைய பழைய தரகுக் கணக்கில் $10,000 (ரூ. 8.5 லட்சம்) இருப்பதைக் கண்டுபிடித்தேன்.

AI மூலம் ரூ.10 லட்சம் கடனை அடைத்த பெண் - 30 நாட்களில் நடந்த ஆச்சர்ய சம்பவம்! | American Woman Paid Her Loan With Chatgpt Help

இப்படி என்னிடம் பணம் இருப்பதை நான் மறந்தேவிட்டேன். ChatGPT ஐப் பயன்படுத்தி ஒரு பேன்ட்ரி அடிப்படையிலான உணவுத் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் மளிகைக் கட்டணத்தை மாதத்திற்கு ரூ. 50,000 குறைத்தேன். இப்படி 30 நாள்களின் முடிவில், என் கடனில் பாதிக்கும் மேலான $12,078 (ரூ.10.3 லட்சம்) திருப்பிச் செலுத்தியிருந்தேன்.

இது எந்த மந்திர தந்திரமும் இல்லை. நம்முடைய விழிப்புணர்வு, உறுதி, எனது நிதிகளில் கவனம் செலுத்துவது போன்ற நாம் கண்டுகொள்ளாத பக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சாத்தியமானது.

இப்போது மீதமுள்ள கடனை அடைக்க மற்றொரு 30 நாள் சவாலை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன். உங்கள் பிரச்னைகளிலிருந்து விலகிச் செல்வதை நிறுத்துங்கள். எல்லாம் சரியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.