இந்திய பணம் எங்கு அச்சடிக்கப்படுகிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!
இந்திய பணம் அச்சடிக்கப்படும் தகவல் குறித்து அறிந்துக்கொள்வோம்.
இந்திய பணம்
இந்தியாவில் அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்டவைகளை வைத்து நாணயங்கள் தயாரிக்கப்பட்டது.
அந்த வகையில் 16ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷெர் ஷா சூரி நாணயங்களுக்கு ‘ருபி’ என்று பெயரிட்டு தனது நாட்டின் நாணயத்தை பயன்படுத்த தொடங்கினார்.
அரசின் கட்டுப்பாடு
1861ல் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், ‘ருபி’ என்ற சொல் இந்திய நாணயத்தைக் குறிக்கும் விதமாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்திய ரூபாய் நோட்டுக்கள் 4 இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன.
மகாராஷ்டிராவின் நாஷிக், மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ், கர்நாடகாவில் உள்ள மைசூர், மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனி.
மேலும் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, நொய்டா ஆகிய இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கப்படுகிறது. பெரும்பாலும், பணம் அச்சடிப்பது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலும், நாணயங்களை அச்சடிப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.