மாற்றுத்திறனாளிகள் குறித்து கிண்டல் - முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது வழக்கு

Suresh Raina Yuvraj Singh Team India Harbhajan Singh
By Karthikraja Jul 16, 2024 06:02 AM GMT
Report

மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ்

2024 உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. 

2024 champions of legends india

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.இந்த வீடியோவில் பிரபல 'Tauba Tauba' பாடலுக்கு யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா நொண்டி, நொண்டி நடந்து வருவது போல் சைகை செய்திருந்தினர்.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் புறக்கணிப்பு செய்வோம் - எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் புறக்கணிப்பு செய்வோம் - எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

மன்னிப்பு

இந்த வீடியோ மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக உள்ளதாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி காவல் நிலையத்தில் கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம். தொடர்ந்து 15 நாட்களுக்கு கிரிக்கெட் விளையாடிய பிறகு உடல் முழுவதும் வலியாக இருந்தது. 

அதை வெளிக்காட்டவே அவ்வாறு வீடியோ வெளியிட்டோம். நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை. நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்." என கூறியுள்ளார்.