பிரபல நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் காதல்? பரவும் தகவல்!

Cricket Gossip Today Prithvi Shaw
By Sumathi 2 மாதங்கள் முன்

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்விஷா, நடிகை நித்தி தபாடியாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரித்விஷா

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்விஷாவும், நடிகை நித்தி தபாடியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

பிரபல நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் காதல்? பரவும் தகவல்! | Indian Cricketer In Love With Famous Actress

நிதி தபாடியா இந்தியில் வெளிவந்த பல பிரபல விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார்.பிரித்வி ஷாவின் புதிய தோழி நிதி தபாடியாவும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சிஐடியில் பங்கேற்றுள்ளார்.

நடிகை நித்தி தபாடியா

இந்த நிலையில், தனது வீட்டில் நடைபெற்ற தசரா விழாவை முன்னிட்டு நடிகை நித்தி தபாடியாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரித்விஷா வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் காதல்? பரவும் தகவல்! | Indian Cricketer In Love With Famous Actress

அதில், ' தனக்கு கர்பா நடனம் கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி' என்று நித்தி தபாடியாவைக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிருத்வி ஷா, 2020ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார்.