தவான் தலைமையில் இலங்கை சென்றது இந்திய கிரிக்கெட் அணி!
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக, ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்றது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்த நிலையில் ஷிகர் தவான் தலைமையில் அடுத்தக் கட்ட இந்திய அணி உருவாக்கப் பட்டுள்ளது.
Touchdown Sri Lanka ???#TeamIndia ?? #SLvIND pic.twitter.com/f8oSX7EToh
— BCCI (@BCCI) June 28, 2021
இந்த அணி, இலங்கையில் 3 சர்வதேச ஒரு நாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சாஹல், சஞ்சு சாம்சன், பிரித்விஷா, ஐபிஎல் போட்டியில் கலக்கிய, தேவ்தத் படிக்கல், சூர்யகுமார் யாதவ், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷன், உள்ளிட்டோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்தில் இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி, வரும் 13- ஆம் தேதி கொழும்பில் நடக்கிறது. இதற்காக, மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணி வீரர்கள், அதற்கான நடைமுறை முடிந்து இலங்கைக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர்.