கிரிக்கெட் வீரரை கரம்பிடித்த ஷாருக்கான் பட நடிகை - யார் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர் நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
நடிகை சாகரிகா
2007-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘சக் தே இந்தியா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சாகரிகா காட்கே. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானை கடந்த 2017-ம் ஆண்டு மணமுடித்தார்.
இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவின் முக்கிய நபராக இருந்தவர் ஜாகீர். அந்த தொடரில் மட்டும் அவர் அதிகபட்சமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கிரிக்கெட் வீரருடன் திருமணம்
தனது வாழ்க்கையில் 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் திருமணம் தொடர்பாக சகரிகா காட்கே கூறுகையில், “மதங்கள் தொடர்பாக எங்களை சுற்றியிருந்தவர்கள் தான் அதிகமாக பேசினார்களே தவிர, நாங்கள் உறுதியாக இருந்தோம்.
காரணம் என்னுடைய பெற்றோர் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள். ஜாகீர்கான் என் அப்பாவை முதன்முறையாக சந்தித்து பேசிய போது இருவருக்குள்ளும் நல்ல பாண்டிங் ஏற்பட்டது.
சொல்லப்போனால் என் அம்மாவுக்கு என்னைவிட ஜாகீர்கானை மிகவும் பிடிக்கும். ஐபிஎல் போட்டிகளின்போது தான் தன்னிடம் காதலை வெளிப்படுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.