இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் வீரர் - முக்கிய தகவல்!
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் விலகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
மோர்னே மோர்க்கல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தலைமை பயிற்சியாளர் கம்பீர், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் முன்னிலையில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
அதில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கம்பீருக்கும் மோர்கலுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகல்?
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் மோர்னே மோர்கல் பயிற்சிக்கு சற்று தாமதமாக வந்ததாக தெரிகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக அவர் பயிற்சிக்கு குறித்த நேரத்தில் வரவில்லை. இதனால் கடுப்பான கவுதம் கம்பீர் பிளேர்கள் முன்னிலையிலேயே கண்டிதிருக்கிறார்.
இந்த விவகாரம் அப்போதே பிசிசிஐ-க்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மோர்னே மோர்க்கல் மற்றும் அபிஷேக் நாயர் இருவரும் அவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அவருடைய பொறுப்பில் இருந்து விலக அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.