ரோஹித்துக்கு டயாப்பர் மாற்றும் வேலை இருக்கு - ஆடம் கில்கிறிஸ்ட் ஓபன்டாக்
ரோஹித் சர்மா குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 3 என தோல்வி அடைந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன் தானாகவே விலகினார்.
தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என விளக்கமளித்தார்.
ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து
இந்நிலையில் ரோஹித் குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் அடம்ஸ் ஆடம் கில்கிறிஸ்ட், "ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்க செல்வார் என நான் நினைக்கவில்லை. அவர் இந்தியா திரும்பியவுடன் தனது நிலை என்ன என்பது குறித்து சிந்திப்பார் என நினைக்கிறேன்.
முதலில் அவர் வீட்டுக்கு சென்றவுடன் தனது இரண்டு மாத குழந்தைக்கு டயாப்பர் மாற்றுவார். அப்போது இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும் என அவருக்கு தோன்றலாம்.
ஆனால், அது நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அவர் சாம்பியன்ஸ் ட்ராஃபியில் சரியாக விளையாட மாட்டார் என நினைக்கிறேன். அதன் பின் அவரை நாம் பார்க்க மாட்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.