மணிப்பூர் விவகாரம்: நாட்டை காக்கும் என்னால், மனைவியை காக்க முடியவில்லை - ராணுவ வீரர் வேதனை!
மணிப்பூரில் நிகழ்ந்த சம்பவம் குறித்து ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலவரம்
மணிப்பூரில் சில மாதங்களாகவே பழங்குடியின மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து வந்தது. தற்பொழுது பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலானது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இதில் முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ வீரர் பதிவு
இந்நிலையில், நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் இருந்த பெண் ஒருவர் ராணுவ வீரரின் மனைவி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ள அந்த ராணுவ வீரர், "நாட்டிற்காக கார்க்கில், இலங்கை சென்று பணியாற்றியுள்ளேன்.
நாட்டை காப்பாற்ற முடிந்த என்னால், எனது மனைவி காப்பாற்ற முடியவில்லை. அந்த கலவரக் கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.