இந்திய ராணுவம் அறிமுகப்படுத்திய Smart Phone.. சீனாவின் ஆட்டத்திற்கு செக் - காரணம் என்ன?

Smart Phones China India Indian Army
By Vidhya Senthil Jan 28, 2025 07:15 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

  இந்திய ராணுவம் 'சம்பவ்' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

  இந்திய ராணுவம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றனர்.

The Indian Army has launched the

சீன எல்லைக்கருகே பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய வீரர்கள் அதிக அளவில் சீன மொபைல் ஃபோன்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இத்தகைய போன்களில் சைபர் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்திய ராணுவத்தினரும், அவர்களின் குடும்பத்தினரும் சீன செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என உளவுத்துறை உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தில் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், டிக் டாக் உட்பட பல செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் சக்தி வாய்ந்த ராணுவப் படை..இந்தியாவிற்கு எந்த இடம்? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!

உலகின் சக்தி வாய்ந்த ராணுவப் படை..இந்தியாவிற்கு எந்த இடம்? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!

மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்திய வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் ராணுவத்தினரை உளவு பார்க்கப்பட்டதாகபுகார் எழுந்தது. இதனை தடுக்க ஃபேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவம் தடை விதித்துள்ளது.

 ஸ்மார்ட்போன்

இந்த நிலையில் இந்திய ராணுவம் 'சம்பவ்' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவுடனான எல்லை குறித்த பேச்சுவார்த்தை நடத்த இந்திய ராணுவம் 'சம்பவ்' (SAMBHAV) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. SAMBHAV என்பது Secure Army Mobile Bharat Versionஆகும்.இந்த ஸ்மார்ட்போன்கள் 5G தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன.

The Indian Army has launched the

மேலும் பாதுகாப்புக்காக முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பான மற்றும் உடனடி தகவல் தொடர்புக்காக ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராணுவத்தினரும் வைத்திருக்கும் வகையிலும், அதேபோல் செல்போனில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்விதமாக இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக, 30,000 சம்பவ் தொலைபேசிகள் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.