அந்த வலியை கூட பார்க்கமாட்டாங்க; அப்படி நடந்துப்பாங்க.. புலம்பி தவிக்கும் நடிகைகள்!

Indian Actress
By Sumathi May 28, 2024 02:30 PM GMT
Report

மாதவிடாய் காலத்தில் படப்பிடிப்பு குறித்து நடிகைகள் சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

மாதவிடாய் 

இந்திய சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் அவ்வப்போது தங்களது நேர்க்கானல்களில் மாதவிடாய் காலத்தில் படப்பிடிப்பில் அனுபவிக்கும் அசெளகரியங்களை குறித்து ஓப்பனாக பேசி வருகின்றனர்.

shruthi hassan - sai pallavi

அதுகுறித்த வீடியோக்களும் கவனம் பெற்று வருகிறது. அந்த வரிசையில், நடிகை சாய் பல்லவி, மாதவிடாய் காலங்களில் நடனமாடுவது மிகவும் சங்கடமாக இருக்கும். பல படங்களில் மாதவிடாய் காலங்களில் நடனமாடியுள்ளேன்.

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான் இருப்பாங்க - போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான் இருப்பாங்க - போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

நடிகைகள் ஆதங்கம்

எதிர்மறையான சூழ்நிலைகளை தவிர்த்து முன்னேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன், மாதவிடாய் நேரத்தில் சிறப்பாக செயல்பட முடியாது. உட்கார்ந்து சூடாக ஏதாவது சாப்பிடுவது போல் இருக்கும். ஆனால் அது எப்போதும் நடக்காது.

hina khan - ratika apte

பீரியட்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் ஆடுவதும், நடிப்பதும் கடினமாக இருக்கும் என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ராதிகா ஆப்தே, மாதவிடாய் வலி ஏற்படும் போது வேலை செய்வதில்லை. நான் மாதவிடாய் பிரச்சனையாக பார்க்கவில்லை. நான் கௌரவமாக உணர்கிறேன்.

மாதவிடாய் குறித்து பேச வெட்கப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார். மாதவிடாயின் முதல் இரண்டு நாட்களில் படப்பிடிப்பில் சில சலுகைகள் இருந்தால் நன்றாக இருக்கும். மூட் ஸ்விங்ஸ், டீஹைட்ரேஷன், லோ பிபி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த நாட்களில் படப்பிடிப்பில் இருந்து விலகி இருப்பது உதவிகரமாக இருப்பதாக நடிகை ஹினா கான் தெரிவித்துள்ளார்.