பீரியட்ஸ் சமயத்தில் இதை மட்டும் பண்ணவே மாட்டேன் - நடிகை அஞ்சலி ஓபன்டாக்!
நடிகை அஞ்சலி பீரியட்ஸ் குறித்து பேசியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். 2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கும் காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.
பெண்கள் சிரமம்
ஆனால், அவர் எனக்கு நல்ல நன்பர்தான் என அஞ்சலி விளக்கமளித்திருந்தார். தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர், பொதுவாகவே ஒவ்வொரு பெண்களுக்கும் பீரியட்ஸ் நேரத்தில் பல வகையான வேதனைகள் ஏற்படும்.

இந்த அனுபவங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒரு சிலருக்கு கடுமையான வலி இருக்கும். இதனால் எந்த விதமான வேலைகளிலும் அவர்களால் ஈடுபட முடியாது. இன்னும் சில பெண்கள் அந்த நாட்களில் சாதாரணமான நாட்களில் எப்படி இருப்பார்களோ அப்படியே இருப்பார்கள்.
எனினும் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
எனவே பீரியட்ஸ் நேரங்களில் ஈரமான உடை அணிந்து கொண்டு நடிப்பது போல இருக்கும் காட்சிகளிலும், மழை நீரில் நனைந்தபடி நடிக்கும் காட்சிகள் இருந்தால் கட்டாயம் அந்த சமயத்தில் படப்பிடிப்பு வேண்டாம் எனக் இயக்குனர்களிடம் கூறி அந்த மாதிரி நாட்களில் நடிப்பதை தவிர்த்து விடுவேன் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan