தொழிலதிபருடன் திருமணம்; வெளிநாட்டில் செட்டில் - உண்மை உடைத்த நடிகை அஞ்சலி!
திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை அஞ்சலி விளக்கமளித்துள்ளார்.
நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.

2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கு காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
திருமணம்?
இந்நிலையில் முன்னதாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒருமுறை நான் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனேன் என்று கிசு கிசு வெளியானது எனத் தெரிவித்திருந்தார்.

அதன்பின் அவருக்கு திருமணமாகி விட்டதாக வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது.
அதனைத் தொடர்ந்து, எனக்கே தெரியாத என்னுடைய திருமண செய்தியை படித்ததும் சிரித்து விட்டேன் என அஞ்சலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan