Saturday, May 10, 2025

அமெரிக்காவுல கல்யாணம் பண்ணி செட்டில் ஆனேன்; அதை மறக்கனும் - அஞ்சலி பளீச்!

Anjali Tamil Cinema
By Sumathi a year ago
Report

தன்னை பற்றிய கிசு கிசு குறித்து நடிகை அஞ்சலி மனம் திறந்துள்ளார்.

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

actress anjali

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். 2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கு காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.

பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த பிரபல இயக்குநர் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த பிரபல இயக்குநர் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

 கிசு கிசு

தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள அஞ்சலி, எனக்கும் நடிகர் ஜெய்க்கும் காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் ஊடகங்களில் பரவி வருகிறது. அதற்கு ஏற்றார் போல பலூன் திரைப்படத்தில் நானும் அவரும் ஜோடியாக நடித்திருந்தோம்.

அமெரிக்காவுல கல்யாணம் பண்ணி செட்டில் ஆனேன்; அதை மறக்கனும் - அஞ்சலி பளீச்! | Anjali About Her Gossip In Marriage

ஆனால் நான் ஜெய்யை காதலிக்கிறேன் என்று எந்த இடத்திலும் சொன்னது கிடையாது. எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே என்னை பற்றி எழுத வேண்டும். யாருடன் என்னை இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்துவிடுகிறார்கள்.

இதற்கு நான் எப்படி பதில் கொடுக்க முடியும். ஒருமுறை நான் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனேன் என்று கிசு கிசு வெளியானது. இதனை பார்த்து எனக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது. எனக்கே தெரியாத என்னுடைய திருமண செய்தியை படித்ததும் சிரித்து விட்டேன். அதனை மறக்க நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.