முத்தம் வேண்டாம், ஓடிவிடுவேன்.. ஆனால் லிப்லாக் ஓகே - அஞ்சலி பாலிசியாம்!

Anjali
By Sumathi Aug 23, 2023 03:30 PM GMT
Report

லிப் லாக் காட்சியில் நடிப்பது குறித்து நடிகை அஞ்சலி மனம் திறந்துள்ளார்.

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.

முத்தம் வேண்டாம், ஓடிவிடுவேன்.. ஆனால் லிப்லாக் ஓகே - அஞ்சலி பாலிசியாம்! | Anjali Talk About Liplock Scene In Movies

2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கு காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

லிப் லாக் காட்சி

இந்நிலையில் இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “எனக்கு நெருக்கமான காட்சிகளை படமாக்குவது மிகவும் கடினம். என் கம்ஃபர்ட் சோன் எவ்வளவு என்று தெரியவில்லை. முத்தக் காட்சிகளின் போது கேரவனுக்கு ஓடிவிடுவேன்.

முத்தம் வேண்டாம், ஓடிவிடுவேன்.. ஆனால் லிப்லாக் ஓகே - அஞ்சலி பாலிசியாம்! | Anjali Talk About Liplock Scene In Movies

அங்கேயே உட்கார்ந்து நீண்ட நேரம் அழுதுவிட்டு மீண்டும் ஷாட்டுக்கு வருவேன். ஆனால் லிப் லாக் காட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. லிப் லாக் காட்சிக்கு வரும்போது ஒரு வரம்புக்கு மேல் போக கூடாது என்று எனக்கு தெரியும்.

நான் ஒரு நச்சு உறவில் இருந்தேன். நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனா, நான் நினைச்ச அளவுக்கு நல்லா அமையல. ஒரு பெண் தனக்கு உறவு வேண்டுமா அல்லது தொழில் வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.

ஒரு ஆணுக்கு திருமணம் முடிந்து தொடர்ந்து வேலை செய்ய முடிந்தால் பெண்ணாலும் முடியும்” எனப் பேசியுள்ளார்.