இந்தியன் 2 பொம்மைகள்; நாங்க என்ன மனுசனா..மிருகமா? விழாவில் பரபரப்பு!
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் இந்தியன் தாத்தா பொம்மைகளால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியன் 2
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் இந்தியன்-2. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது பிரமோஷனுக்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அதில் வரவேற்புக்காக முன்புறத்தில் மிகப்பெரிய உருவம் கொண்ட இந்தியன் தாத்தா பொம்மைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டது. ஈர்ப்புக்காக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த பொம்மைகள் உள்ளே மனிதர்களால் தோளில் சுமந்தபடி நின்றுகொண்டு இருந்தனர்.
வழக்கமாக அட்டைகளில் உருவாக்கப்படும் இதுபோன்ற பொம்மைகள் தற்போது பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனும் மெட்டீரியலால் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யப்பட்ட நான்கு இந்தியன் தாத்தா பொம்மைகள் அங்கு வந்தவர்களை கவர்ந்தது.
விழாவில் பரபரப்பு
ஆனால் வந்திருந்த விருந்தினர்கள் சிலர் முக்கியமாக கமல்ஹாசன் ஆகியோர் அதனை கண்டு கொள்ளாமல் சென்றது நிகழ்ந்திருந்தது. ஒவ்வொரு பொம்மையும் சுமார் 25 கிலோ எடை கொண்டது எனவும் தெரியவந்தது. படத்திலும் இது போன்று பயன்படுத்தியுள்ளனர். மொத்தம் நான்கு பேர் இதனை சுமந்து நின்றனர்.
இதை கவனித்த பத்திரிகையாளர்கள் பொம்மையை தூக்கிக் கொண்டு நின்றிருந்த ஒருவரிடம் 'எப்படி இருக்கு அண்ணா இவ்ளோ நேரம் தூக்கிக்கிட்டு நிக்கிறீங்க' என கேட்டதற்கு, வியர்வை ஊத்திக்கிட்டே இருக்கிறது. 25 கிலோ இருக்கும்' என்றார்.உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்' .
அந்த பொம்மையை தூக்கி ஒருவருடைய தோளில் வைப்பதற்கே நான்கு பேர் தேவைப்படும் நிலையில் நாள் முழுக்க நிற்பதற்கு ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் என்றார் . மேலும் மற்றொருவர், எத்தனை மணி நேரமாக இப்படி பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு 'அரை மணி நேரமா... நாங்க என்ன மனுசனா மிருகனா