ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்? பிசிசிஐ முடிவு!
ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை
2025 ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. பிசிசிஐதான் இந்த தொடரை நடத்தவுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி இருக்கிறார்.
இதன் காரணமாக, ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் அனைத்து தொடர்களில் இருந்து விலகுவதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
பிசிசிஐ முடிவு
அடுத்த மாதம் இலங்கையில் மகளிருக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அந்த தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து ஆசிய கிரிக்கெட் சங்கத்திற்கு மின்னசஞ்சல் மூலமாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலை நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் அமைச்சருக்குக் கீழே இந்திய அணி ஒரு தொடரில் விளையாட முடியாது என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எனவே, பாகிஸ்தான் இல்லாமல் மற்ற ஆசிய அணிகளைச் சேர்த்து இந்தியா தனிப்பட்ட முறையில் ஒரு தொடரை நடத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.