கொரோனா தொற்றால் ஐபிஎல் போட்டியை தவறவிடும் SRH வீரர்
டிராவிஸ் ஹெட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மீண்டும் தொடங்கிய ஐபிஎல்
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள், நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் மழையால் நேற்றைய RCB மற்றும் KKR அணிக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது.
ஐபிஎல் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டதால், வெளிநாட்டுகளுக்கு சென்ற வீரர்கள் தற்போது மீண்டும் இந்தியா வருகின்றனர்.
நாளைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளதால், அந்த அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் டிராவிஸ் ஹெட்
ஆனால் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் கோரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால், நாளை காலை தான் இந்தியா வருவார் என்றும், நாளைய போட்டியில் பங்கு பெற மாட்டார் என்றும் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
ஆனால், அவருக்கு எப்போது கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
டிராவிஸ் ஹெட் இந்த ஐபிஎல் தொடரில், இதுவரை 281 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள SRH அணி, 3 வெற்றி மட்டுமே பெற்று பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
