Bazball'க்கு முடிவுரை எழுதிய இந்தியா - சரித்திர வெற்றியை பதிவு செய்த இந்தியா அணி..!

Rohit Sharma Cricket Indian Cricket Team
By Karthick Feb 26, 2024 09:46 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

4-வது டெஸ்ட்

2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த இந்தியா அணி, 4-வது டெஸ்டில் முதலில் பந்து வீசியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 353 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.

india-wins-4th-test-against-england

ஜோ ரூட் 122 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். பின்னர் களமிறங்கிய இந்தியா அணியில், முக்கிய வீரர்கள் சொதப்ப இளம் வீரர் துருவ் ஜுரேல் மட்டும் 90 ரன்களை எடுக்க, இந்தியா அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

india-wins-4th-test-against-england

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை அஸ்வின் (5 விக்கெட்) மற்றும் குல்தீப் யாதவ் (4 விக்கெட்) சுருட்டினர். அந்த அணியால் 145 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 192 ரன்களை துரத்திய இந்தியா அணி 5 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது.

india-wins-4th-test-against-england

அதிகபட்சமாக ரோகித் சர்மா 55 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, கடைசி வரை களத்தில் இருந்த சுப்மன் கில் 52 ரன்களை எடுத்தார்.

அப்பாவை கட்டிப்பிடித்து ட்ராமாவா..? சர்ப்ராஸ் கானை மறைமுகமாக விமர்சித்தாரா சேவாக்

அப்பாவை கட்டிப்பிடித்து ட்ராமாவா..? சர்ப்ராஸ் கானை மறைமுகமாக விமர்சித்தாரா சேவாக்

இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று, இங்கிலாந்து அணியின் Bazball நுட்பத்தை முழுவதுமாக தோற்கடித்துள்ளது இந்தியா அணி.

india-wins-4th-test-against-england

இங்கிலாந்து அணியின் இந்த டெக்னிக்கிற்கு முடிவுரை எழுதிய முதல் அணி இந்தியா தான் என்பது குறிப்பிடதக்கது.