போர் பதற்றம்; இறங்கி அடிக்கும் இந்தியா - விடுமுறை அளித்த ஐடி நிறுவனங்கள்
போர்க்கால ஒத்திகையை முன்னிட்டு ஐடி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
போர்க்கால ஒத்திகை
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய 2 இடங்களில்,
ஊழியர்களுக்கு விடுமுறை
இன்று மாலை 4 மணிக்கு இந்த போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    