பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த CRPF வீரர் பணிநீக்கம் - என்ன காரணம்?
பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த CRPF வீரர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானியர்கள் விசா ரத்து
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் எல்லையை மூடுவது, விசாவை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தானியர்களின் விசாவை ரத்து செய்துள்ளதால், ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பெண்னுடன் திருமணம்
அவர்களுடன் சேர்த்து, CRPF வீரரான முனீர் அகமதுவின் மனைவி மினல் கானையும் நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஜம்முவை சேர்ந்த மினல் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு CRPF படையில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஆன்லைன் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த மினல் கான் என்ற பெண் அவருக்கு அறிமுகமாகி உள்ளார்.
இதனையடுத்து, கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம், ஆன்லைன் மூலமாகவே அவர்களது திருமணம் முறைப்படி நடந்துள்ளது. இதனையடுத்து, நீண்ட நாட்களாக இந்திய விசாவுக்காக காத்திருந்த மினல் கான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார்.
அவரது விசா மார்ச் 22 ஆம் தேதியோடு காலாவதியாகி உள்ளது. இருப்பினும் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். அவர் நீண்ட நாட்கள் விசா பெற விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்தியாவில் 10 நாட்கள் வரை தங்க அவருக்கு கடந்த 29 ஆம் தேதி அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பணி நீக்கம்
இந்நிலையில், பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததாகவும், பாகிஸ்தான் பெண்ணை இந்தியாவில் தங்க அனுமதித்ததாக கூறி முனீர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய முனீர் அகமது, "பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்வதற்கான அனுமதியை, CRPF தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றேன். இதற்கு எந்தவித தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர்.
திருமணத்திற்கு பின்னரும் எனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண சான்று உள்ளிட்டவற்றையும் நான் சமர்ப்பித்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.