இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி: வெற்றி யாருக்கு சாதகம் - எகிறும் எதிர்பார்ப்பு!
டி20 உலககோப்பை போட்டியானது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
புள்ளி பட்டியல்
பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறந்து விளங்கும் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், அடுத்து, நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. புள்ளி பட்டியலில் இந்தியா தான் அதிகபட்சமாக 4 புள்ளிகளை எடுத்து முதலிடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்காவுடன் மோதல்
இந்நிலையில், 3வது போட்டியாக இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியுடன் நாளை (அக்.30) தேதி மோதுகிறது. இந்த போட்டியானது மாலை 4.30 மணிக்கு பெர்த் நகரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
எந்த அணிக்கு சாதகம்
இரு அணிகளும் ஒப்பிடுகையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 5 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் இந்திய அணி 4 முறையும் தென்னாப்பிரிக்கா ஒரே ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
அதிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் அட்டகாசமான ரெக்கார்டையும் வைத்துள்ளார்.
இரு அணியின் டி20 ரெக்கார்ட்
சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரையில் இரு அணிகளும் 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 13 முறையும், தென்னாப்பிரிக்க அணி 9 முறையும் வெற்றிகளை பெற்றுள்ளன. இதில் 2 போட்டிகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.
மழைக்கு வாய்ப்பா?
போட்டி நடைபெறும் நேரம் இரவு 7 மணி என்பதால் அப்போது வானம் மட்டுமே மேக மூட்டத்துடன் இருக்கும். இதனால் மழைக்கு 30% வரை தான் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.