டி20 உலககோப்பை: முக்கிய 3 போட்டிகள் - மிஸ் பண்ணிடாதீங்க!
ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை 2022 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வரும் 23ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய- பாகிஸ்தான் அணி மோதுகின்றன. இப்போட்டி பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேப்போல் அன்றைய தினத்தில் மழை பாதிப்பும் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த உலககோப்பை போட்டியில் கட்டாயம் பார்க்கவேண்டிய முக்கியமான போட்டிகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்தியா பாகிஸ்தான் (23/10/2022)
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றால் அப்போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு எந்த போட்டிக்கும் இருக்காது. இம்மாதம் 23ஆம் தேதி இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது. இந்திய அணியில் முக்கிய வீரர்களான பும்ரா மற்றும் ஜடேஜா காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை என்பது மிகப்பெரிய பின்னடவை இருந்தாலும்,
ஷமி மற்றும் சாஹலின் பந்துவீச்சு பக்கபலமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி எப்படி பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்கிறது என்பது மிகப்பெரிய சவாலன ஒன்று தான்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (28/10/2022)
ஆஸ்திரேலியா VS இங்கிலாந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த இரு அணிகள் போட்டி என்றால் எப்போதும் அனல் பறக்கும். இவர்கள் வழக்கமாகவே ஆஷஸ் டெஸ்ட் தொடரில் எதிர்கள் போலவே அடித்துகொள்வார்கள். அப்படி இருக்கும் இரு அணியும் டி20-யில் சிறந்த ஃபார்மில் உள்ளன.
இரு அணிகளிலும், பலம் வாய்ந்த வீரர்களான, ஆஸ்திரேலியாவில் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹசில்வுட் என உள்ளனர். இங்கிலாந்து அணியில், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, அலெக்ஸ் ஹேல்ஸ், பட்லர், டேவிட் வில்லி என பக்க பலமாக உள்ளனர்.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து (22/10/2022)
ஆஸ்திரேலியா VS நியூசிலாந்து ஆட்டமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக தான் இருக்கும். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்க்க, நியூசிலாந்து அணியில், கேன் வில்லியம்சன், கப்தில், டெவன் கான்வே, போல்ட், சவுதி உள்ளனர். இவர்களின் பங்கு முக்கியமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.