டி20 உலகக் கோப்பை - கடைசி திக்.. திக்.. நிமிடத்தில் நெதர்லாந்து அணி திரில் வெற்றி...!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி இன்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளாக பிரிவு
இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' - பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, 'பி' - பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.
நெதர்லாந்து த்ரில் வெற்றி
இன்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் 2வது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதனையடுத்து, களமிறங்கிய நெதர்லாந்து அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை பறித்து, 13.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன் பின்பு, அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ்- டிம் பிரிங்கிள் இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல, பிரிங்கிள் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் வான் பீக் களமிறங்கினார்.
திக்... திக்.. என்று அனல் பறந்த இப்போட்டியின் இறுதி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட 1 பந்து மீதம் இருக்கையில், நெதர்லாந்து அணி 112 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி அமோக வெற்றி பெற்றது.