சேப்பாக்கத்தில் இலவசமா கிரிக்கெட் பாக்கலாம் - எந்த மேட்ச் தெரியுமா?

Cricket Tamil nadu Chennai Indian Cricket Team South Africa National Cricket Team
By Karthikraja Jun 26, 2024 02:30 PM GMT
Report

 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம்

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி , 1 டெஸ்ட் போட்டி , 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. 

india vs south africa womens cricket

அடுத்தாக ஜூன் 28 முதல் ஜூலை 1 ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்; மு.க.ஸ்டாலின் வாக்குறுதி - எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்; மு.க.ஸ்டாலின் வாக்குறுதி - எங்கு தெரியுமா?

டி20 போட்டி

விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக வரும் சி, டி மற்றும் இ கீழ் தளத்திலும், வாலாஜா சாலை வழியாக வரும் ஐ, ஜெ, கே கீழ் தளத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் எனத் தெரிவித்துள்ளது. 

free cricket chepauk stadium

மேலும் , ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணம் 150ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டை 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.