சேப்பாக்கத்திற்கு நாளை Cricket match பார்க்க போறீங்களா? ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
கிரிக்கெட் போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் பஸ்களில் டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியை பார்க்க செல்லும் ரசிகர்கள் பஸ்களில் டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-பயணிகள் கவனத்திற்கு! வரும் 25.01.2025 அன்று சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டிக்கு,
Online/pre-printed டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ.கழக பேருந்துகளில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள்
இதனால் 25.01.2025 அன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மா.போ,கழக பேருந்துகளில் போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3மணி நேரத்திற்கு பின்னர் பேருந்துகளில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், சாதாரண கட்டண பேருந்துகளில் வழக்கம்போல் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.அரசினர் தோட்டம் மேட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து M.A சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை மா.போ.கழக இணைப்பு பேருந்துகள் (Shuttle servi- ce) மாலை 4.00 மணி முதல் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது.