இந்தியா - ஆஸ்திரேலியா டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம் - என்ன நடந்தது?

Indian Cricket Team Australia Cricket Team SLC T20 League 2025
By Sumathi Nov 08, 2025 10:36 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

IND vs AUS 

முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியை குவித்து இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

ind vs aus

இந்நிலையில் ப்ரிஸ்பேனில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இரு வீரர்களும் இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தது.

எல்லாருக்கும் வைர நெக்லஸ்; மகளிர் அணிக்கு கிப்ட் கொடுக்கும் எம்பி - யார் இவர்?

எல்லாருக்கும் வைர நெக்லஸ்; மகளிர் அணிக்கு கிப்ட் கொடுக்கும் எம்பி - யார் இவர்?

தற்காலிக நிறுத்தம்

அப்போது திடீரென மின்னலுடன் வானிலை மோசமடைந்தது. கனமழைக்கான அறிகுறி நிலவி வருகிறது. மைதானம் சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் மின்னல் அடித்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம் - என்ன நடந்தது? | India Vs Australia T20I Called Off Reason

இதனால், மோசமான வானிலை மற்றும் வீரர்கள் பாதுகாப்பு கருதி ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.