கனடா விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியா.. ஆனால், இதற்கு மட்டும்தான்!
கனடாவிற்கான பல்வேறு விசா சேவைகளை இந்தியா மீண்டும் துவக்கியுள்ளது.
இந்தியா-கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இரு நாடுகளுக்கிடையில் பெரும் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு விசா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
விசா சேவை
கனடாவின் 40 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இந்தியா உத்தரவிட்டது. இந்நிலையில் விசா சேவை குறித்து கனடா கோரிக்கை வைத்தது.
தொடர்ந்து, கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு விசா சேவைகளை இன்று முதல் (அக்.26) இந்தியா மீண்டும் துவங்க உள்ளது. என்ட்ரி விசா, பிசினஸ் விசா, மெடிக்கல் விசா மற்றும் கான்பரன்ஸ் விசா உள்ளிட்டவற்றின் சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.