பாகிஸ்தானை சரமாரியாக தாக்கிய ஈரான்; அதற்காகத் தான்.. ஆதரவு தந்த இந்தியா!
பாகிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதல்
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் தீவிரவாத அமைப்பின் முகாம்களில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
முன்னதாக, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது அந்த தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இப்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியா ஆதரவு
இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, தூதரையும் திரும்பப்பெற்றது. ஈரானுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசுக்கு தகவல்கள் கொடுத்தும் அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த தாக இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து இந்தியா,
இது ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான விவகாரம். இதில், இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாதத்தை சிறிதளவும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஈரான் தற்காப்புக்காக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது எனத் தெரிவித்துள்ளது.