கணவர் கண்முன்னே கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - பாகிஸ்தானில் பயங்கரம்!
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிர்ச்சி சம்பவம்
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஜீலம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கும் இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த இளம் பெண் கருவுற்றுள்ளார்.
இந்நிலையில் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் வீட்டிற்குள் ஆயுதம் ஏந்திய 5 பேர் புகுந்துள்ளனர்.
கணவர் முன் பயங்கரம்
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அப்பெண்ணின் வீட்டுக்கு பயங்கர ஆயுதங்களுடன் குற்றவாளிகள் நுழைந்து பெண்ணின் கணவரை மிகக் கடுமையாகத் தாக்கி கயிற்றால் கட்டி வைத்துள்ளனர்.
பின்னர் கர்ப்பிணிப் பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் மருத்துவப் பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரியும் தடயவியல் பரிசோதனைக்காக லாகூர் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் (HRCP) சமீபத்திய அறிக்கைப்படி, பாகிஸ்தானில், கடந்த ஆறு ஆண்டுகளில் (2015-21) 22,000க்கும் மேற்பட்ட இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.