இந்தியாவின் பிரபலமான முதல்வர் யாரு'னு தெரியுமா..? லிஸ்ட்'லேயே இல்லாத மு.க. ஸ்டாலின் - யோகி கூட 2-வது தான்..?
நாட்டின் பிரபலமான முதல் 5 முதல்வர்களின் பட்டியல் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபலமான முதல்வர்கள்
இந்தியாவின் மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்திலும், உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜு ஜனதா தளத்தின் ஒடிசா முதல்வரான பட்நாயக் 52.7 சதவீதத்தின் அடிப்படையில் முதலிடத்திலும், பாஜகவின் யோகி ஆதித்யநாத் 51.3 சதவீதத்துடன் மதிப்பீட்டில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 3-வது இடத்திலும், குஜராத்தின் பூபேந்திர படேல் 4-வது இடத்திலும் இருக்கின்றனர். இருவருமே பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த பட்டியலில் திரிபுரா முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரும் பாஜகவை சேர்ந்தவரே. பட்டியலில் 5-இல் 4 பேர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜீ, டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் யாருமே இடம் பெறாதது பெரும் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது.