இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியல் - தமிழக முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பணக்கார முதலமைச்சர்கள்
இந்தியாவில் உள்ள மாநில முதலமைச்சர்களின் சொத்து மதிப்புகள் குறித்து தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக ஆந்திர முதலமைச்சர் முதல் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 931 கோடிக்கு மேல் ஆகும்.
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பீமா கண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.332 கோடி.
அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.51 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 6-வது இடம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.38 கோடி.
சொத்து மதிப்பு
இந்த வரிசையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலினின் தனிப்பட்ட ஆண்டு வருமானம் ரூ.28 லட்சம் ஆகும்.
அதே போல் 29-வது இடத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிடித்துள்ளார்.அவரது சொத்து மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
மேலும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் 30-வது இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.55 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தை பிடித்துள்ளார்.அவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சம்.