பிரதமர் மோடிக்கு எதிரான வாசகம் - அமெரிக்காவில் இந்துக் கோயில் அவமதிப்பு!
அமெரிக்காவில் ஸ்ரீநாராயண் கோயில் அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்துக் கோயில்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவின் சாக்ரமெண்டோவில் பிஏபிஎஸ் ஸ்ரீசுவாமிநாராயண் கோயில் உள்ளது. கடந்த செப்.24-ம் தேதி இரவு இந்த கோவிலின் சுற்றுப்புற சுவரில் மர்ப நபர்கள் சிலர் இந்துக்களே திரும்பிச் செல்லுங்கள்” என்ற வாசகத்தையும்,
பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிரான கருத்துக்களைச் சுவர் முழுவதும் எழுதி வைத்துச் சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செப்.24-ம் தேதி இரவு சான்பிரான்சிஸ்கோவின் சாக்ரமெண்டோவில் உள்ள பிஏபிஎஸ் ஸ்ரீசுவாமிநாராயண் கோயிலில் நடந்த அவமதிப்புச் செயலை இந்தியத் துணை தூதரகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவமதிப்பு
மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு செப். 17ம் தேதி நியூயார்க்கின் மெல்வில்லில் உள்ள பிஏபிஎஸ் கோயிலும் வெறுப்பு வாசகங்களால் இதே போல் அவமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.