ஆண்-பெண் பாலின இடைவெளி : மோசமான இடத்தில் இந்தியா

India
By Irumporai Jul 14, 2022 05:19 AM GMT
Report

பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி பெறுதல், சுகாதாரம் மற்றும் வாழ்தல், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஆண்-பெண் பாலின இடைவெளியை உலக பொருளாதார அமைப்பு ஆய்வு செய்து  அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்தியாவுக்கு 135 வது இடம்

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சா்வதேச பாலின இடைவெளி குறியீட்டை அந்த மையம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஆண்-பெண் பாலின இடைவெளி : மோசமான இடத்தில் இந்தியா | India Ranks 135Th On The Male Female Gender Gap

இதில் மொத்தம் 146 நாடுகள் பட்டியலில் இந்தியா 135-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5 இடங்கள் முன்னேறி இருந்தாலும், கடந்த 16 ஆண்டுகளாக பாலியல் சமத்துவமின்மையில் இந்தியா மோசமான நிலையிலேயே இருப்பதாக உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மோசமான நிலையில் இந்தியா

பாலின சமத்துவமின்மை விகிதம் 5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள 5 நாடுகளில் இந்தியா, கத்தாா், பாகிஸ்தான், அஜா்பைஜான், சீனா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆண்-பெண் பாலின இடைவெளி : மோசமான இடத்தில் இந்தியா | India Ranks 135Th On The Male Female Gender Gap

அண்டை நாடுகளான வங்கதேசம் 71, நேபாளம் 96, இலங்கை 110, பாகிஸ்தான் 145 வது இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான், சாடு ஆகிய நாடுகள் கடைசி 5 இடங்களில் உள்ளன.

இந்த பட்டியலில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன.