அசோகர் சின்னத்தில் சிங்கங்களுக்கு அவமரியாதை - வலுக்கும் கண்டனங்கள்!

Indian National Congress BJP Narendra Modi Delhi
By Sumathi Jul 14, 2022 02:27 AM GMT
Report

புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் நிறுவப்பட்டுள்ள தேசிய நினைவு சின்னத்தை அவமதிப்பு செய்துள்ளதாக பாஜக-வினரை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தேசிய நினைவு சின்னம்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தினை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். ஆனால், இந்த புதிய தேசிய சின்னம், நமது தேசிய சின்னமான

pm modi

அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அசோகரின் சிங்கங்கள் அழகாககவும், கம்பீரமாகவும் இருக்குமெனவும்,

அசோகரின் சிங்கங்கள்

மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள தேசியச் சின்னத்தில் உள்ள சிங்கங்கள் ஆக்ரோஷமாகவும், உறுமிக்கொண்டும் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,

அசோகர் சின்னத்தில் சிங்கங்களுக்கு அவமரியாதை - வலுக்கும் கண்டனங்கள்! | National Symbol Lion Ashoka Controversy

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உள்ளிட்ட பலர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆக்ரோஷம்

காந்திக்கு பதிலாக கோட்சேவைத் தேர்வு செய்வது போல், அமைதியான சிங்கங்களுக்குப் பதிலாக இந்த ஆக்ரோஷமான சிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே மோடியின் புதிய இந்தியா எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

ஆனால், இந்த விமர்சனங்களை மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சாரநாத் தூணில் உள்ள நான்கு முக சின்னங்களின் உயரம் சுமார் ஒன்றரை மீட்டர் தான் எனவும்,

வழக்கு

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்தின் உயரம் ஆறரை மீட்டர் எனவும் கூறியுள்ளனர். மேலும், சில எதிர்க்கட்சிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நான்முக சின்னத்தை மாற்ற வேண்டும் என்றும்,

மாற்றி அமைக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறி வருகின்றன.