பெயரே இல்லாமல் இயங்கும் ரயில் நிலையம்; எது தெரியுமா? சுவாரஸ்ய தகவல்
ரயில் நிலையம் ஒன்று எந்தவொரு பெயரும் இல்லாமல் இயங்கி வருகிறது.
பெயரே இல்லை..
நாடு முழுக்க மொத்தம் 7112 ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஆனால், நாட்டிலேயே ஒரே ஒரு ரயில் நிலையத்திற்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு பெயரும் இல்லை.
இந்த ரயில் நிலையம் ஒடிசா மாநிலத்தில் ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையே பங்குரா-மாசகிராம் ரயில் பாதையில் அமைந்துள்ளது. ரயில்வே சார்பில் இதற்கு ஒரு பெயர் ஒதுக்கப்பட்டது.
ஆனால், ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் இரு கிராம மக்களுமே தங்கள் ஊரின் பெயரை ரயில் நிலையத்திற்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். எனவே, ரயில்வே நிலையத்திற்குப் பெயரே இல்லாமல் போய்விட்டது.
பொதுமக்கள் மோதல்
மஞ்சள் நிற போர்டில் கூட எந்தப் பெயரும் இடம்பெறவில்லை. இந்த ரூட்டில் பங்குரா- மாசகிராம் இடையே இயக்கப்படும் ஒரே ஒரு ரயில் மட்டுமே செல்லும். இது தினசரி ஆறு முறை இங்கு நின்று செல்கிறது. இதுதொடர்பாக பேசியுள்ள ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் நபகுமார் நந்தி, "ரயில்வே சார்பில் ஒரு பெயர் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும், அதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இப்போது ரயில் நிலையத்திற்குப் பெயரிடும் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதி உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.